Skip to main content

நானும் ஒரு யாதவன் - கலைஞர் ! | Kalaignar Karunanidhi's timing wit !


தமிழில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிக்ஸர்களை அடிப்பது சகஜம் தான் என்றாலும் அந்த சிக்ஸர்களிலும் பல சிக்ஸர்கள் மைதானத்தை விட்டே பறந்தது என்பது தான் வரலாற்று பதிவு. கிரிக்கெட் விளையாட்டில் நொடிப்பொழுதில் பந்தை மின்னல் வேகத்தில் வீர்கள் சிக்ஸர்களை அடிப்பார்கள் அல்லவா அது போல தான் கலைஞரின் தமிழ் பேச்சு. ஆங்கிலத்தில் டைமிங் என்று சொல்லுவார்கள் அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் யாரும் எதிர்பாராத சமயத்தில் சிலர் சில காரியங்களை அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தும் அளவுக்கு செய்வார்கள்.

மதுரையில் இருக்கும் யாதவா கல்லூரியில் எப்படியாவது கலைஞரை ஒருமுறை அழைத்து பேச வைக்க வேண்டும் என்று அப்போதைய கல்லூரி முதல்வராக இருந்த தமிழ்குடிமகன் விரும்பினார்.
பலமுறை முயற்சித்த பின்னர் கலைஞர் அந்த கல்லூரிக்கு வரும் நாள் வந்தது . மேடையில் மாணவ மாணவிகளின் தமிழ் பேச்சி மற்றும் கவிதைகள் என மேடை களை கட்டியது.
நிறைவு நிகழ்ச்சியாக கலைஞரின் உரை தொடங்கியது. கலைஞர் பேச போகிறார் என்றால் அந்த அரங்கம் எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரிய வேண்டும். எதிர்பார்த்தபடியே கலைஞர் யாதவா கல்லூரியின் மேடையில் பேச ஆரம்பித்தார்.
நானும் ஒரு யாதவனே என்று ஆரம்பித்தார். யாரும் இப்படி கலைஞர் சொல்லுவார் என்று எதிர்பார்க்கவில்லை. திக்கு தெரியாமல் விழித்தார்கள். சிலர் ஆச்சிரியதுடன் பார்த்தார்கள் கலைஞரா இப்படி பேசுகிறார் என்றவாறு. பின்னர் தான் அந்த இமாலய சிக்ஸர்களை ஒவ்வொன்றாக தனக்கே உரிய பாணியில் அரங்கத்தை அதிராவிட்டார்.
"ஆம். நானும் ஒரு யாதவன் தான் பழகிய நண்பரை பிரி"யாதவன்" ....... அண்ணா வழியில் நடப்பதால் சூது வாது அறி"யாதவன்" ........அன்பையும் நட்பையும் தவிர வேறு ஒன்றும் தெரி"யாதவன்" என்று சொல்லவும்
அவ்வுளவ்வுதான் கலைஞரின் சமயோகித பேச்சை கேட்ட அனைவரும் ஆரவாரம் செய்ய அரங்கமே அதிர்ந்தது !

Comments

Popular posts from this blog

மரணத்தின் விளிம்பில் 35 நாட்கள்கொரோனாவை போராடி வென்ற டெல்லி பெண்மணி | Delhi Woman wins fight against Corona after 35 days

மரணத்தின் விளிம்பில் 35 நாட்கள் கொரோனாவை  போராடி வென்ற டெல்லி பெண்மணி டெல்லியை சேர்த்த ஒரு பெண் 35 நாட்களாக கொரோனாவால் பாதிக்க பட்டு  செயற்கை சுவாசத்தில் போராடிய நிலையில் தற்போது மீண்டு வந்து அந்த கொடிய நோயை வென்றிருக்கிறார். இந்த செய்தி கொரோனாவால் பாதிக்க பட்ட அனைவருக்கும் ஒருவித உத்வேகத்தை கொடுப்பதாக அமைந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு மேல் செயற்கை சுவாசம் மூலம் மரணத்தின் விளிம்பு வரை சென்று தனது மன வலிமையாலும் மருத்துவர்களின் போற்றுதலுக்குரிய சிகிச்சையாலும் மீண்டு நலமுடன் வீடு திரும்பி இருக்கிறார் அந்த பெண்மணி.  குருக்ஷேத்திராவில் தற்போது சிகிச்சைக்கு பின் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும் அந்த பெண் தனது அனுபவத்தை கூறும் போது தனக்கு நல்லமுறையில் சிகிச்சையும் ஊக்கமும் கொடுத்த மருத்துவர்கள்  மற்றும் பணியாளர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்து இருக்கிறார். அந்த மருத்துவமனையில் வேறு எந்த ஒரு கொரோனா பாதிப்படைந்தவர்களும்  இத்தனை நாட்கள் செயற்கை சுவாசத்தை பயன்படுத்தியது இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. 40 வயதுடைய மீனு சவுகான் என்ற பெண் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கொரோனா சோதனையை மேற்

வெஜிடபிள் பிரியாணி (VEGITABLE BIRIYANI)

 வெஜிடபிள் பிரியாணி  தேவையான பொருள்கள்  பிரியாணி அரிசி - 400 மி.லி  நெய் - 100 மி.லி  பல்லாரி வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 5 பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி  பட்டை - 2 துண்டு  ஏலக்காய் - 4 கிராம்பு - 4 அன்னாசிப்பூ - 2  முந்திரிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி  தேங்காய் - 1 முடி காளிப்ளவர் - 100 கிராம்  காரட் - 200 கிராம்  பட்டானி - 200 கிராம்  உருளைக்கிழங்கு - 1  பீன்ஸ் காய் - 50 கிராம்  பாதிரொட்டி அல்லது ரஸ்க் 4 மல்லிசிச்செடி - கொஞ்சம்  புதினா - சிறிதளவு  உப்பு - தேவைக்கேற்ற அளவு  பூண்டு - 2 இஞ்சி - 25 கிராம் செய்முறை காய்கறிகள் அவரவர்கள் பிரியப்படி கூட்டியோ, குறைத்தோ போட்டு கொள்ளுங்கள். வாசனை சாமான்களை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும். மிளகாயையும் தனியாக பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும். உருளை கிழங்கை கொஞ்சம் பெரியதாகவும் மற்ற காய்கறிகளை ஒரே அளவாகவும் வெட்டி குக்கரில் குழயாமல் உப்பு சேர்த்து அவித்துக் கொள்ளவும். புதினா மல்லி இலைகளை இலை சிலையாக எடுத்து கழுவி வைக்கவும்.  பிரியாணி அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் வடிய வைக்கவும்.  வாய் அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊ

21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...! | 21st Century's Pennycuick is Gagandeep Singh Bedi !

இளைய சமுதாயமே ஒரு நிமிடம் இதை படியுங்களேன். படிக்கும் பொழுது கண்ணீர் மல்கியது. என்ன ஒரு பெருந்தகையாளர்! அடி பணிகிறேன் ககன்தீப் சிங் அவர்களே. மனந்திறந்து பாராட்டுங்கள் அன்பர்களே!! முடிந்தால் உங்கள் வலைதளத்தில் பதியுங்கள்~~~பகிருங்கள். 21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!! நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை. ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன. 2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி ஆவார். அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம். சத