Skip to main content

தன்னை விமர்சித்தவரை அப்படியே திகைகச் செய்த கலைஞர் ! | Kalaingnar's stunning reply !


நகைச்சுவை பேச்சாளர்கள் பொதுவாக ஒவ்வொரு கட்சிகளிலும் இருப்பார்கள். அப்படி ஒருவராக இருந்தவர் தான் காங்கிரஸ் கட்சியின் சின்ன அண்ணாமலை. அந்த கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி திமுக தானே அப்படி இருக்கையில் அவர்கள் திமுகவை தான் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். திமுகவை விமர்சிப்பவர்கள் என்றால் அவர்களுக்கு அதிலும் ஒரு வாழ்க்கையை கொடுப்பவர் கலைஞரை தவிர வேறு யாராக இருப்பார்கள் ? ஆகவே அவர்களால் கலைஞரை விமர்சனம் செய்யாமல் அவர்களுக்கு தூக்கமும் வராது.

எதிராளிகள் கலைஞரை கண்டபடி பேசியவர்களுக்கு தக்க சன்மானமும் பதவிகளையும் வழங்கி இருக்கிறார்கள். அவரை எதிர்த்தே கட்சியை தொடங்கிய வரலாறும் உண்டு. ஆக மொத்தத்தில் கலைஞர் தமிழ்நாடு என்னும் அரசியல் சக்கரத்தில் எப்போதுமே அச்சாணியாகவே இருப்பார். அவரை பிரித்துவிட்டு அரசியல் சக்கரங்கள் நகர வாய்ப்பும் இல்லை. அவர் 90 வயதில் அசராமல் அரசியலில் கொடிகட்டி பறந்தகாலத்திலும் கூட நேற்று பெய்த மழையில் காளான்களைப் போல முளைத்த புதிய புதிய "லெட்டர்பேட்" கட்சி தலைவர்களுக்கும் கூட சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். அரசியலில் அவரை ஆயிரமாயிரம் பேர் சீண்டி பார்த்து இருக்கலாம் ஆனால் அவரை வென்றவர்கள் யவரும் இல்லை. 13 தேர்தல்களில் ஒருமுறை கூட தோல்வியை காணாத ஒரு அரசியல் சாணக்கியன் தான் கலைஞர். ஒருபக்கம் அரசியல் அப்படியாக இருக்க மறுபக்கம் அவரின் தமிழ் ஆற்றலுக்கு முன்னால் யாரும் நெருங்கியது கூட இல்லை இன்னும் சொல்ல போனால் தொட்டு பார்த்ததில்லை.
ஒரு நாள் என்ன நடந்தது என்றால் இந்த சின்ன அண்ணாமலை ஒரு மாலை பொழுதில் மேடையில் பேசும் போது கலைஞரை பெயரை சொல்லி சொல்லி கடுமையாக வசைபாடினார். கடும் விமர்சனத்தை அள்ளி வீசினார். மறுநாள் காலை சின்ன அண்ணாமலை தான் பேசியது அளவுக்கு மீறியது என்பதால் தவறுதான் என்பதை உணர்ந்து மனம் வருந்தினார். பின்னர் கலைஞரை எப்படியும் நேரில் சந்தித்து வருத்தத்தை தெரிவித்து விட வேண்டும் என்றும் முடிவு செய்தார். நேராக கலைஞரின் இல்லத்திற்கே சென்றார் சின்ன அண்ணாமலை. அங்கு சென்ற அவர் கலைஞரிடம் நேரடியாகவே மன்னிப்பு கோரியவாறு நின்றார். இதை பார்த்த கலைஞர் சிறிதும் சஞ்சலப்படாமல் "எப்படி தாக்கிப் பேசினீர்கர்கள்" என்று கேட்டார். அதற்கு பதிலாக உங்கள் பெயரை குறிப்பிட்டு தான் நேற்று பேசினேன் என்றார்.
விஷயத்தை கேள்விப்பட்ட கலைஞர் பின்னர் சொன்னார் "சரி சரி பரவாயில்லை. உங்கள் மகன் மீது உங்களுக்கு கோபம் இருந்திருக்கலாம். அதனால் தான் என்னை திட்டும் சாக்கில் அவனைத் திட்டி இருக்கிறீர்கள் என்று நான் நினைத்து கொள்கிறேன். பரவாயில்லை விடுங்கள் என்றார்" இதை கேட்ட சின்ன அண்ணாமலை அப்படியே திகைத்து போனார். அங்கிருந்து இதை பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கலைஞர் பதிலை கேட்ட சின்ன அண்ணாமலை ஏன் அப்படி திகைத்து நிற்கிறார் என்று வினவினார்கள்.
பின்னர் தான் தெரிந்தது சின்ன அண்ணாமலையின் மகனின் பெயரும் கருணாநிதிதான் என்று !

Comments

Popular posts from this blog

மரணத்தின் விளிம்பில் 35 நாட்கள்கொரோனாவை போராடி வென்ற டெல்லி பெண்மணி | Delhi Woman wins fight against Corona after 35 days

மரணத்தின் விளிம்பில் 35 நாட்கள் கொரோனாவை  போராடி வென்ற டெல்லி பெண்மணி டெல்லியை சேர்த்த ஒரு பெண் 35 நாட்களாக கொரோனாவால் பாதிக்க பட்டு  செயற்கை சுவாசத்தில் போராடிய நிலையில் தற்போது மீண்டு வந்து அந்த கொடிய நோயை வென்றிருக்கிறார். இந்த செய்தி கொரோனாவால் பாதிக்க பட்ட அனைவருக்கும் ஒருவித உத்வேகத்தை கொடுப்பதாக அமைந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு மேல் செயற்கை சுவாசம் மூலம் மரணத்தின் விளிம்பு வரை சென்று தனது மன வலிமையாலும் மருத்துவர்களின் போற்றுதலுக்குரிய சிகிச்சையாலும் மீண்டு நலமுடன் வீடு திரும்பி இருக்கிறார் அந்த பெண்மணி.  குருக்ஷேத்திராவில் தற்போது சிகிச்சைக்கு பின் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும் அந்த பெண் தனது அனுபவத்தை கூறும் போது தனக்கு நல்லமுறையில் சிகிச்சையும் ஊக்கமும் கொடுத்த மருத்துவர்கள்  மற்றும் பணியாளர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்து இருக்கிறார். அந்த மருத்துவமனையில் வேறு எந்த ஒரு கொரோனா பாதிப்படைந்தவர்களும்  இத்தனை நாட்கள் செயற்கை சுவாசத்தை பயன்படுத்தியது இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. 40 வயதுடைய மீனு சவுகான் என்ற பெண் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கொரோனா சோதனையை மேற்

வெஜிடபிள் பிரியாணி (VEGITABLE BIRIYANI)

 வெஜிடபிள் பிரியாணி  தேவையான பொருள்கள்  பிரியாணி அரிசி - 400 மி.லி  நெய் - 100 மி.லி  பல்லாரி வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 5 பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி  பட்டை - 2 துண்டு  ஏலக்காய் - 4 கிராம்பு - 4 அன்னாசிப்பூ - 2  முந்திரிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி  தேங்காய் - 1 முடி காளிப்ளவர் - 100 கிராம்  காரட் - 200 கிராம்  பட்டானி - 200 கிராம்  உருளைக்கிழங்கு - 1  பீன்ஸ் காய் - 50 கிராம்  பாதிரொட்டி அல்லது ரஸ்க் 4 மல்லிசிச்செடி - கொஞ்சம்  புதினா - சிறிதளவு  உப்பு - தேவைக்கேற்ற அளவு  பூண்டு - 2 இஞ்சி - 25 கிராம் செய்முறை காய்கறிகள் அவரவர்கள் பிரியப்படி கூட்டியோ, குறைத்தோ போட்டு கொள்ளுங்கள். வாசனை சாமான்களை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும். மிளகாயையும் தனியாக பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும். உருளை கிழங்கை கொஞ்சம் பெரியதாகவும் மற்ற காய்கறிகளை ஒரே அளவாகவும் வெட்டி குக்கரில் குழயாமல் உப்பு சேர்த்து அவித்துக் கொள்ளவும். புதினா மல்லி இலைகளை இலை சிலையாக எடுத்து கழுவி வைக்கவும்.  பிரியாணி அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் வடிய வைக்கவும்.  வாய் அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊ

21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...! | 21st Century's Pennycuick is Gagandeep Singh Bedi !

இளைய சமுதாயமே ஒரு நிமிடம் இதை படியுங்களேன். படிக்கும் பொழுது கண்ணீர் மல்கியது. என்ன ஒரு பெருந்தகையாளர்! அடி பணிகிறேன் ககன்தீப் சிங் அவர்களே. மனந்திறந்து பாராட்டுங்கள் அன்பர்களே!! முடிந்தால் உங்கள் வலைதளத்தில் பதியுங்கள்~~~பகிருங்கள். 21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!! நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை. ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன. 2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி ஆவார். அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம். சத