Skip to main content

அன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்று டாக்ஸி ஓட்டுநர்! | Cricket star to Taxi driver !


ஆம் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஷத் கான். இவர் பாகிஸ்தான் நாட்டுக்காக 9 டெஸ்ட் போட்டிகளும் , 58 ஒருநாள் போட்டிகளும் விளையாடி இருக்கிறார். 1997 முதல் 2006ஆம் ஆண்டு வரை விளையாடிய அர்ஷாத் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மொத்தம் 89 விக்கட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 

கிரிக்கெட் போட்டியில் இடம்பெறுவது சாதாரண காரியம் இல்லை. பல முயற்சிகள் அயராத உழைப்பு போன்றவற்றின் மூலமாக தான் அந்த நாட்டின் அணியில் இடம் பிடிக்க முடியும். ஒருமுறை தேர்வாகி உள்ளே வந்துவிட்டால் அதோடு நின்று விடாது. ஒவ்வொருவரும் தங்களது திறமையை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நுழைந்து நிற்க முடியும். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கோடிக்கணக்கில பணம் உலகளாவிய புகழ் எங்கு சென்றாலும் ஒரு செலிபிரிட்டி என்ற அந்தஸ்து இவற்றுடன் அவர்களுக்கு ஒரு நிரந்தர  சொகுசு வாழ்க்கைக்கு உத்ரவாதமாகவே அமையும் என்பதுதான்  பொதுவாக பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் நடந்தது. 

ஒரு கட்டத்தில் தனது நாட்டுக்காக விளையாடிய அர்ஷத் இந்தியாவின் வீரேந்திர ஷேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை ஒரு போட்டியில் வீழ்த்திய தருணத்தில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக உச்சநிலையில் இருந்தார் அப்போது கூட அர்ஷத் நினைத்து பார்த்திருக்க மாட்டார் பின்னாளில் தான் வாழ்க்கை என்னும் சக்கரத்தில் பயணிக்க அன்றாட சாப்பாட்டுக்கும் கூட டேக்சி ஓட்டிதான் என்பதை. 

கிரிக்கெட் உள்ள வந்தவர்கள் எல்லாரும் கோடீஸ்வரர்கள் என்றும் சொல்ல முடியாது. உதாரணமாக நம் தமிழ்நாட்டில் நடராஜ் தேர்வு ஒரு மிகச்சிறந்த உதாரணம். அடிமட்டத்தில் இருந்து தனது திறமையால் கிரிக்கெட் உலகினுள் கால்பதித்து சாதித்தது அவருக்கு மட்டும் பெருமை இல்லை நாட்டுக்கும் பெருமை தான் இன்னும் சொல்ல போனால் தமிழ்நாட்டுககே பெருமை. இது போன்று தான் வீரேந்திர சேவாக் தென்னாபிரிக்காவின் மகாயா நிட்டினி சமீபத்திய வீரரான சேட்டன் சக்கரியா போன்றவர்கள். இவர்களில் சேவாக் மற்றும் நிட்டினி அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவு பெற்றது. அடிமட்டத்தில் இருந்து வந்து சாதித்தும் விட்டார்கள். சேட்டன் சக்கரியா இப்போது தான் கால் பதித்திருக்கிறார் காலம் இருக்கிறது அவர் சிறப்பாக தனது திறமையை காட்டுவதற்கு. 

ஆனால் ஒருவர் உச்சத்துக்கு சென்ற பின்னர் அந்த இடத்தில தொடர்ந்து நீடிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற நிலை வருவதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த நிலைமையை தான் அர்ஷத் கான் தற்போது சந்தித்து கொண்டு இருக்கிறார். 1997-98 ஆம் ஆண்டு மேற்கு இந்தியதீவுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டாக்சி ஓட்டிக்கொண்டு தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறார். இவர் அங்குதான் இருக்கிறார் என்பதை 5 ஆண்டுக்கு முன்பே சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. அவரை அடையாளம் கண்ட நபர் அந்த பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்.  இது அவர்களுக்கிடையே காரில் பயணிக்கும் போது நடந்த உரையாடல். 

அவர் எங்கள் காரின் ஓட்டுனராக எங்களுடன் வந்திருந்தார். அப்போது மெதுவாக நாங்கள் பேச ஆரம்பித்தோம். அப்போது அவர் சொன்னார் நான் பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவன் இப்போது சிட்னி நகரில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்றார். நான் பலமுறை ஹைதராபாத் நகருக்கு செல்வதுண்டு என்றார். மேலும் சொன்னார் நான் லாகூர் பாதுஷா அணிக்காக விளையாடுவேன் என்றார். இதை கேட்டு கொண்டு இருந்த அந்த பயணி சற்று ஆச்சிரியதுடன் சரி உங்கள் முழு  பெயர்தான் என்ன என்று கேட்டார்.இதை கேட்கும் போதே அந்த நபருக்கு ஓரளவுக்கு அடையாளம் தெரிந்து விட்டது. தான் பேசி கொண்டு இருப்பவர் பாகிஸதான் நாட்டு கிரிக்கெட் போட்டியில் எங்கோ பார்த்திருக்கிறார். பின்னர் அவரை இன்னும் சற்று உற்று பார்க்கையில் அடையாளம் கண்டார் அவர் தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஷத் கான் என்பதை. பின்னர் மனமார கைகுலுக்கி கொண்டு பின்னர் விடை பெற்றோம் என்றார். 

இவருடைய கடைசி போட்டி இந்தியாவுக்கு எதிரானடெஸ்ட் போட்டி பெங்களூரிலும் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியிலும் விளையாடினார். என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

மரணத்தின் விளிம்பில் 35 நாட்கள்கொரோனாவை போராடி வென்ற டெல்லி பெண்மணி | Delhi Woman wins fight against Corona after 35 days

மரணத்தின் விளிம்பில் 35 நாட்கள் கொரோனாவை  போராடி வென்ற டெல்லி பெண்மணி டெல்லியை சேர்த்த ஒரு பெண் 35 நாட்களாக கொரோனாவால் பாதிக்க பட்டு  செயற்கை சுவாசத்தில் போராடிய நிலையில் தற்போது மீண்டு வந்து அந்த கொடிய நோயை வென்றிருக்கிறார். இந்த செய்தி கொரோனாவால் பாதிக்க பட்ட அனைவருக்கும் ஒருவித உத்வேகத்தை கொடுப்பதாக அமைந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு மேல் செயற்கை சுவாசம் மூலம் மரணத்தின் விளிம்பு வரை சென்று தனது மன வலிமையாலும் மருத்துவர்களின் போற்றுதலுக்குரிய சிகிச்சையாலும் மீண்டு நலமுடன் வீடு திரும்பி இருக்கிறார் அந்த பெண்மணி.  குருக்ஷேத்திராவில் தற்போது சிகிச்சைக்கு பின் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும் அந்த பெண் தனது அனுபவத்தை கூறும் போது தனக்கு நல்லமுறையில் சிகிச்சையும் ஊக்கமும் கொடுத்த மருத்துவர்கள்  மற்றும் பணியாளர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்து இருக்கிறார். அந்த மருத்துவமனையில் வேறு எந்த ஒரு கொரோனா பாதிப்படைந்தவர்களும்  இத்தனை நாட்கள் செயற்கை சுவாசத்தை பயன்படுத்தியது இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. 40 வயதுடைய மீனு சவுகான் என்ற பெண் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கொரோனா சோதனையை மேற்

வெஜிடபிள் பிரியாணி (VEGITABLE BIRIYANI)

 வெஜிடபிள் பிரியாணி  தேவையான பொருள்கள்  பிரியாணி அரிசி - 400 மி.லி  நெய் - 100 மி.லி  பல்லாரி வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 5 பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி  பட்டை - 2 துண்டு  ஏலக்காய் - 4 கிராம்பு - 4 அன்னாசிப்பூ - 2  முந்திரிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி  தேங்காய் - 1 முடி காளிப்ளவர் - 100 கிராம்  காரட் - 200 கிராம்  பட்டானி - 200 கிராம்  உருளைக்கிழங்கு - 1  பீன்ஸ் காய் - 50 கிராம்  பாதிரொட்டி அல்லது ரஸ்க் 4 மல்லிசிச்செடி - கொஞ்சம்  புதினா - சிறிதளவு  உப்பு - தேவைக்கேற்ற அளவு  பூண்டு - 2 இஞ்சி - 25 கிராம் செய்முறை காய்கறிகள் அவரவர்கள் பிரியப்படி கூட்டியோ, குறைத்தோ போட்டு கொள்ளுங்கள். வாசனை சாமான்களை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும். மிளகாயையும் தனியாக பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும். உருளை கிழங்கை கொஞ்சம் பெரியதாகவும் மற்ற காய்கறிகளை ஒரே அளவாகவும் வெட்டி குக்கரில் குழயாமல் உப்பு சேர்த்து அவித்துக் கொள்ளவும். புதினா மல்லி இலைகளை இலை சிலையாக எடுத்து கழுவி வைக்கவும்.  பிரியாணி அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் வடிய வைக்கவும்.  வாய் அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊ

21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...! | 21st Century's Pennycuick is Gagandeep Singh Bedi !

இளைய சமுதாயமே ஒரு நிமிடம் இதை படியுங்களேன். படிக்கும் பொழுது கண்ணீர் மல்கியது. என்ன ஒரு பெருந்தகையாளர்! அடி பணிகிறேன் ககன்தீப் சிங் அவர்களே. மனந்திறந்து பாராட்டுங்கள் அன்பர்களே!! முடிந்தால் உங்கள் வலைதளத்தில் பதியுங்கள்~~~பகிருங்கள். 21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!! நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை. ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன. 2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி ஆவார். அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம். சத