Skip to main content

Posts

Showing posts from May, 2021

21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...! | 21st Century's Pennycuick is Gagandeep Singh Bedi !

இளைய சமுதாயமே ஒரு நிமிடம் இதை படியுங்களேன். படிக்கும் பொழுது கண்ணீர் மல்கியது. என்ன ஒரு பெருந்தகையாளர்! அடி பணிகிறேன் ககன்தீப் சிங் அவர்களே. மனந்திறந்து பாராட்டுங்கள் அன்பர்களே!! முடிந்தால் உங்கள் வலைதளத்தில் பதியுங்கள்~~~பகிருங்கள். 21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!! நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை. ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன. 2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி ஆவார். அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம். சத

கொரோனாவின் கோரத்தாண்டவம் ஏப்ரலில் 69 லட்சத்தில் இருந்து மே மாதத்தில் 72 லட்சத்தை நெருங்குகிறது | May deadliest month

கோவிட்  19 பெருந்தொற்று இந்தியாவில் இப்போது எண்ணிக்கை அளவில் கணிசமான அளவுக்கு குறைந்து வருகிறது என்றாலும் கூட இரண்டாம் அலையில் தொற்று மின்னல் வேகத்தில் நோயின் தாக்கத்தை பரவ செய்தது. முதல் அலையை எல்லாம் ஒப்பிடும் போது பன்மடங்கு அளவில்  பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  மே மாதத்தை பொறுத்தவரையில் முதல் 21 நாட்களை பார்க்கும் போது பாதிப்பின் தன்மை மிக ஆழமாகவும் கொடூரமாகவும் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று மே 21 ஆம் தேதி வரை மொத்தத்தில் 70 லட்சம் பேருக்கு மேலாக  பாதிப்படைய செய்திருக்கிறது. இது கடந்த மாதத்தின் அளவை விட சற்று கூடுதல் என்றே சொல்லலாம். இரண்டாவது அலையில் பெருந்தொற்றால் ஏப்ரல் மாதத்தில் 69.4 லட்சம் பேர் பாதிக்க பட்டு இருக்கிறார்கள். இதுவே மே மாதம் (21 ஆம் தேதி வரை) 71.3 லட்சம் பேர் பாதிக்க பட்டு இருக்கிறார்கள்  இதையே நாம் கொரோனா தொற்று முதல் அலை எப்படி இருந்தது என்று பார்க்கும் போது  ஆகஸ்ட் 2020 அன்று 19.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். செப்டம்பர் 2020 மாதம் 26.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கை பார்க்கும் போது முதல் அலையில் ஆகஸ்ட் 2020 மாதத்தில

மொபைல் ஹேக் - தப்பிக்க கடைபிடிக்கவேண்டியது என்னென்ன | Mobile hack and how to prevent ourself

தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி விண்ணை தொடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதை பிரமிப்பாக ஒரு புறம் பார்த்தாலும் மறுபுறம் வளர்ச்சியின் தாக்கம் மிக மோசமான விளைவை நம்மிடையே ஏற்படுத்தி வருகிறது. இந்த விஞ்ஞான காலத்தில் அதற்கேற்ப தொழிநுட்பத்தை பயன் படுத்தாமல் இருக்க முடியாது. இதனால் நமது பாதுகாப்பு சற்று கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. நாம் இன்டர்நெட்டை பயன்படுத்தி எதை செய்தாலும் ஹேக் என்ற வலையில் பலர் மாட்டிக்கொள்கிறார்கள். எந்த மாதிரியான தொழில்நுட்பத்தை பயன் படுத்தினாலும் இந்த பிரச்சனை வந்து விடுகிறது குறிப்பாக மொபைல் போன்களை அதிக மக்கள் பயன்படுத்துவதால் இதில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களின்  எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது.  எதற்கும் ஒரு தீர்வு உண்டு. தீர்வு இல்லாமல் இல்லை ஆனால் என்ன தீர்வு என்பதை நாம் தான் முயற்சி செய்து அதனை தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும். சில வழிமுறைகளை பின்பற்றினால் இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அது என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக அறிவோம்.  1. எண்கள் மீது கண்கள் இருக்கவேண்டும் நம்முடைய மொபைல் போன்களில் இருக்க கூடிய பதிவு செய்த எண்களை (கால் லிஸ்ட் ) நாம் சரி

மரணத்தின் விளிம்பில் 35 நாட்கள்கொரோனாவை போராடி வென்ற டெல்லி பெண்மணி | Delhi Woman wins fight against Corona after 35 days

மரணத்தின் விளிம்பில் 35 நாட்கள் கொரோனாவை  போராடி வென்ற டெல்லி பெண்மணி டெல்லியை சேர்த்த ஒரு பெண் 35 நாட்களாக கொரோனாவால் பாதிக்க பட்டு  செயற்கை சுவாசத்தில் போராடிய நிலையில் தற்போது மீண்டு வந்து அந்த கொடிய நோயை வென்றிருக்கிறார். இந்த செய்தி கொரோனாவால் பாதிக்க பட்ட அனைவருக்கும் ஒருவித உத்வேகத்தை கொடுப்பதாக அமைந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு மேல் செயற்கை சுவாசம் மூலம் மரணத்தின் விளிம்பு வரை சென்று தனது மன வலிமையாலும் மருத்துவர்களின் போற்றுதலுக்குரிய சிகிச்சையாலும் மீண்டு நலமுடன் வீடு திரும்பி இருக்கிறார் அந்த பெண்மணி.  குருக்ஷேத்திராவில் தற்போது சிகிச்சைக்கு பின் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும் அந்த பெண் தனது அனுபவத்தை கூறும் போது தனக்கு நல்லமுறையில் சிகிச்சையும் ஊக்கமும் கொடுத்த மருத்துவர்கள்  மற்றும் பணியாளர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்து இருக்கிறார். அந்த மருத்துவமனையில் வேறு எந்த ஒரு கொரோனா பாதிப்படைந்தவர்களும்  இத்தனை நாட்கள் செயற்கை சுவாசத்தை பயன்படுத்தியது இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. 40 வயதுடைய மீனு சவுகான் என்ற பெண் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கொரோனா சோதனையை மேற்

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம்: கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? - பாகம் 1 | How Sadhguru built his Isha empire. Illegally Part 1

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம்: கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? - பாகம் 1 | How Sadhguru built his Isha empire. Illegally Part 1 | கோயம்புத்தூரில் ஜக்கி வாசுதேவ் எப்படி தனது ஆசிரமத்தையும் ஈஷா அமைப்பையும் சட்டவிரோதமாக உருவாக்கினார் என்பது குறித்து newslaundry இணையதளம் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதன் மொழிபெயர்ப்பு. மூன்று பாகங்களாக வாசுதேவனின் சரித்திரத்தை நியஸ் லாண்ட்ரி வெளியிடவிருக்கிறது. பகுதி பகுதியாக அதன் மொழிபெயர்ப்பை தருகிறேன். பொலுவம்பட்டியில் 150 ஏக்கர் கோயம்புத்தூரின் இக்கரை பொலுவம்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவுக்கு மிகப் பெரிய ஆசிரமத்தை உருவாக்கிவைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் இந்த சாமியாரின் ஆசிரமம் பல்வேறு முறைகேடுகள் செய்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கும்போதெல்லாம், "இவையெல்லாம் நிரூபிக்கப்பட்டவையா?" என்று கேள்வியெழுப்புவது இந்தச் சாமியாரின் வழக்கம். ஆகவே, இவரது ஆசிரமம் குறித்து பல்வேறு அரசு ஊழியர்கள், செயற்பாட்டாளர்கள், ஊழலை அம்பலப்படுத்துபவர்களிடம்

அறிஞர் அண்ணாவின் அமைச்சரவை | DMK forming government in 1967 - Arignar Anna becoming CM

சரித்திரத்தை மாற்றிய திராவிட முன்னேற்ற கழகம்  1952, 1957, 1962 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் நடந்து முடிந்த தேர்தல்களானது மெட்ராஸ் ஸ்டேட் சட்டமன்ற தேர்தல்கள் என்ற பெயரில் நடத்தப்பட்டது.  1967 மெட்ராஸ் ஸ்டேட் தேர்தல் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் தான் ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான எதிர் கட்சிக்கூட்டணி வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா முதல்வரானார்.  1967 இல் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். இவர்களில் 189 பேர் பொதுத்த்தொகுதிகளில் இருந்தும் 45 பேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 45 தனித்தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். என்னென்ன கட்சிகள் அப்போதய தேர்தலில் போட்டி போட்டது ?  ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தனித்து போட்டி போட்டது. அப்போதைய எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டி போட்டது.  திமுக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் இவைகள் தான்  1. சுதந்திர கட்சி  2. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  3. சி.பா..ஆதித்த

ஏன் இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை உலகையே உலுக்கியது ? | Why India's second wave shocked the world

ஏன் இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை உலகையே உலுக்கியது ? ஏப்ரல் 25க்கு மேல் ஒவ்வொரு நாளும் உலகளவில் கொரோனா  பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கையில் 40% பேர் இந்தியாவை சார்ந்தவர்கள். சில நாட்களில் இது ஐம்பது சதவிகிதமாகவும் இருந்தது. உலகளவிலான கொரோனா  இறப்பு எண்ணிக்கையில் முப்பது சதவிகிதத்தினர் இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த எண்ணிக்கைகள் எத்தனை பேர் பாதிக்கபட்டார்கள் எத்தனை பேர் இறந்து போனார்கள் என்பதை பற்றியது மட்டுமே. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதை விட மிக அதிகம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரே நாள் எண்ணிக்கை அடிப்படையில் எந்த எந்த நாடுகளின் பாதிப்பு எத்தனை சதவிகிதம் வரை தொட்டு இருக்கிறது என்ற புள்ளிவிவரங்களை பார்க்கும் போது இதிலும் இந்தியா தான் முதல் இடத்தில் இருந்தது. அதாவது 54.1 சதவிகிதம் என்ற அடிப்படையில் இருந்தது. அதற்க்கு அடுத்த படியாக ஒரு நாடு பக்கத்தில் இருந்தது என்றால் அது அமெரிக்க 47.3 சதவிகிதமும் அதனை தொடர்ந்து இத்தாலி மற்றும் பிரேசில் நாடுகள் தலா 29.6 சதவிகிதமாகவும் இருந்திருக்கிறது.  தடுப்பூசி போடுவதில் உலக நாடுகளை ஒப்பிடும் போது நாம் எங்கே

கபசுர குடிநீர் மூலிகை பொருள்கள் என்னென்ன ? | Kaba Sura Kudineer ingredients

கபசுர குடிநீர் மூலிகை பொருள்கள் என்னென்ன ? | Kaba Sura Kudineer ingredients | கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வல்லமை படைத்தது என்பது யாவரும் அறிந்த செய்தி தான். இந்த அற்புதமான குடிநீரானது பதினைந்து மூலிகை பொருள்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனுடைய உச்ச பலன்  நுரையீரல் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மற்றும் சுவாச செயல்பாடுகள்,சம்மந்தப்பட்ட கோளாறுகளில் தொடர்புடைய  இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து முறையே சீர்படுத்தும் தன்மையை உடையது.  கொடூர கொரோனா இரண்டாம் அலை  தற்போதுள்ள காலம் கொரோனா பெருந்தொற்று காலம். உலகநாடுகளையே புரட்டிப்போட்டு கொண்டு இருக்கிறது. மேலும் இந்தியாவில் இரண்டாம் அலை தனது கோரத்தாண்டவத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை சூறையாடிக்கொண்டு இருக்கிறது. தற்போதைய கொரோனா பெருந்தொற்று நிலவரப்படி (மே 16, 2021) கூட உதாரணமாக  4077 பேர் இந்தியாவில்  பலியாகி இருக்கிறார்கள். கடந்த சில தினங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இன்று மொத்த பாதிப்பு 3.11 லட்சம் பேர். கடந்த வாரத்தை ஒப்பிடும் போது சற்று குறைந்து இருக்கிறது என்றே சொல்லலாம்.  இப்படி உயிர்களை சூறையாடும்

TAMILNADU CHIEF MINISTERS LIST

TAMILNADU  CHIEF MINISTERS LIST  & THEIR TENURE PERIODS Sl.No Chief Minister From Period To Period Party Name 1 M.K.Stalin 07 May 2021 Present Dravida Munnetra Kazhagam 2 Edappadi K. Palaniswami 16 Feb 2017 03 May 2021 All India Anna  Dravida Munnetra Kazhagam 3 O. Panneerselvam 06 Dec 2016 15 Feb 2017 All India Anna  Dravida Munnetra Kazhagam 4 J. Jayalalithaa 24 May 2016 04 Dec 2016 All India Anna  Dravida Munnetra Kazhagam 5 J. Jayalalithaa 23 May 2015 23 May 2016 All India Anna  Dravida Munnetra Kazhagam 6 O. Panneerselvam 29 Sep 2014 22 May 2015 All India Anna  Dravida Munnetra Kazhagam 7 J. Jayalalithaa 16 May 2011 27 Sep 2014 All India Anna  Dravida Munnetra Kazhagam 8 M. Karunanidhi 13 May 2006 15 May 2011 Dravida Munnetra Kazhagam 9 J. Jayalalithaa 02 Mar 2002 12 May 2006 All India Anna  Dravida Munnetra Kazhagam 10 O. Panneerselvam 21 Sep 2001 01 Mar 2002 All India Anna  Dravida Munnetra Kazhagam 11 J. Jayalalithaa 14 May 2001 21 Sep 2001 All India Anna  Dravida Munnetra