Skip to main content

Posts

Showing posts from April, 2021

சில ஆக்சிஜன் உண்மைகள் (Truth behind Oxygen)

  இந்தியாவின் ஆகப் பெரும் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனமான லிண்டே இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ந் ஹனுமன் மால் பெங்கானி கூறுவது: ஆக்சிஜன் தொழிலில் 45 ஆண்டுகள் ஈடுபட்டவன், 50 ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவதில் ஈடுபட்டவன் என்கிற முறையிலும் சில விஷயங்களைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். 1. தொழில் துறைக்குத் தேவையான ஆக்சிஜனும், மருத்துவத்திற்கான ஆக்சிஜனும் ஒரே இடத்தில்தான் தயாரிக்கப் படுகின்றன, ஒரே மாதிரியான் தொட்டிகளிலும், ஒரே மாதிரி கலன்களிலும் (சிலிண்டர்களிலும்தான் நிரப்பப் படுகின்றன. மருத்துவத்திற்கான ஆக்சிஜனின் ஒவ்வொரு தொகுதியையும் தயாரிப்பு நிறுவனம் ஆய்வு செய்து சான்றிதழ் தர வேண்டும். வேறு எந்த வேறுபாடும் இல்லை. தொழிற்சாலைகளுக்கு 99.5 சதவீதம் தூய்மையான ஆக்சிஜனும், மருத்துவத் துறை ஆக்சிஜன் 93 சதவீதத் தூய்மையுடன் இருக்க வேண்டும். இதுதான் உலகளாவிய நடைமுறை. 2. இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அறவே இல்லை. மருத்துவத் துறைக்குத் தேவையான ஆக்சிஜனைத் தயாரிக்க மொத்த உற்பத்தித் திறனில் 1 சதவீதத்தைப் பயன்படுத்தினால் போதும் என்று நீங்கள் அறிந்தால் ஆச்சரியப் படுவீர்கள். கொரொனா தடுப்பிற்க

ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு சொல்லுவது என்ன ?

ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு சொல்லுவது என்ன ?   ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் கிட்ட தட்ட இருபது நாட்களை கடந்த காத்திருப்புக்கு பின்னர்  ஒருவழியாக தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்புகளும் வந்துவிட்டன. சில தீர்க்கமான தகவல்களை இந்த கருத்து கணிப்புகள் தெளிவு படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்றும். மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி கட்சியான திரிணமுல் காங்கிரஸ் கட்சி சற்று முன்னணி பெற்று மீண்டும் ஆட்சியை தொடரும். கேரளத்தில் பினராய் விஜயன்  மீண்டும் முதல்வராகிறார். அதே போல அசாமில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்கிறது. புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் உறுதியாகிறது. தமிழ்நாடு மொத்த இடங்கள் - 234 பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் - 118 வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் கட்சி கூட்டணி - திமுக கூட்டணி   தமிழகத்தை பொறுத்த மட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றியை எட்டி பிடிக்க காத்திருக்கிறது. 234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 165 தொகுதிகளில் வெற்றி பெற போவதாக முடிவுகள் தெரிவிக்கிறது. ஆளும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் 66 இ

இரண்டாவது தடுப்பூசியை நீங்கள் போட தவறினால் என்ன நடக்கும் ?

இரண்டாவது தடுப்பூசியை நீங்கள் போட தவறினால் என்ன நடக்கும் ? கோவிட் 19 க்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டீர்களா ? அதிலும் குறிப்பாக இரண்டாவது தடுப்பூசியை நீங்கள் போட தவறினால் என்ன நடக்கும் ?  கோவாக்சின் தடுப்பூசியை இரண்டு கட்டமாக போடும் போது முதல் முறை தடுப்பூசி போட்டதில் இருந்து 28 நாட்கள் கழித்து இரண்டாவது முறைக்கான தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும்.  ஒருவேளை அப்படி நீங்கள் தடுப்பூசி போட மறந்து விட்டீர்கள் என்றால் என்ன செய்வது ?  பல மாநிலங்களில் கோவிட் 19 தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் இப்போது இந்த கேள்வி பூதாகாரமாக ஒவ்வொருவரிடத்திலும் கேள்வியாக எழுப்ப பட்டுக்கொண்டு இருக்கிறது. முதலில் கோவாக்சின் கோவிஷீல்டு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.  இந்தியாவில் அனுமதிக்கபட்ட தடுப்பூசிகள் ஒன்று கோவாக்சின் இது பாரத் பையோடெக் நிறுவனத்தால் தயாரிக்க படுகிறது. மற்றொன்று கோவிஷீல்டு இது சீரம் நிறுவனத்தால் தயாரிக்க படுகிறது. இரண்டுக்குமே சில வித்தியாசங்கள் இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கோவாக்சின் முதல் முறை போட்டு கொண்ட பின்னர் இரண்டாவது முறை போடும் பொழுது இதற்கான இடைப்பட்ட கால அளவு 28 நாட்கள். க

கொரோனா வைரஸ் கடந்து வந்த பாதை (Covid 19 Timelines)

டிசம்பர் 31, 2019 சீனா உலக சுகாதார அமைப்பிடம் ஒரு விதமான  நிமோனியா நோய்  தொற்று ஊஹான் மாகாணத்தில் பரவிக்கொண்டு இருப்பதாகவும் சுமார் 11 மில்லியன் மக்கள் அங்கே இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தது. பாதிக்க பட்ட பெரும்பாலானோர் அந்த நகரின் ஹுவாணன் கடல் உணவு பெரும் சந்தையில் வேலை பார்த்தவர்கள் என்பதையும் உறுதிப்படுத்தியதோடு ஜனவரி ஒன்றாம் தேதி 2020ல் அந்த சந்தையையும் மூடினார்கள்.  ஜனவரி 7, 2020 உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள் என்னவென்றால் புதிய ரக வைரஸ் வீரியத்துடன் பரவி வருவதாகவும் அதன் பெயர் 2019-nCoV என்றும் தெரிவித்தார்கள். ஜனவரி 9,2020 உலக சுகாதார அமைப்பு நோவேல் கொரோன வைரஸ் தான் உலகில் வேகமாக பரவும் நிமோனியாவுக்கு காரணமாக இருக்கிறது என்றும் அதிகார்வப்பூர்வமாக அறிவித்தார்கள். ஜனவரி 10,2020 விஞ்ஞானிகள் அந்த வைரஸை பற்றிய வரைபடத்தை முழுமையாக வெளியிட்டார்கள் ஜனவரி 11, 2020 சீனா இந்த  புதிய ரக வைரஸ் பாதித்த ஒருவரின் முதல் இறப்பை உலகிற்கு தெரிய படுத்தியது. அவர் சுமார் 61 வயதுடைய பெரியவர் ஹுவாணன் கடல் உணவு சந்தையில் சென்று வந்தவர் என்பதையும் தெரிய படுத்தியது.  ஜனவரி 1

தோசைகள் பலவிதம் - 1 | Dosai Varieties - 1 |

தோசைகள் பலவிதம் - 1 | Dosai Varieties - 1 | ஒரு நாட்டின் உணவு பழக்கவழக்கமானது அந்த நாட்டின் மண்வளம், பருவநிலை மாற்றம், கலாச்சாரம், தொழில்கள், பயிரிடப்படும் காய்கறிகள், பழங்கள், வாசனைப்பொருட்கள் ஆகியவற்றை பொறுத்து அமையும். அந்த வகையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் உணவாக தோசையும் இருக்கிறது. தமிழநாட்டை பொறுத்தவரை அரிசி முதன்மை உணவாகும். இவர்கள் சைவ மற்றும் அசைவ உணவுகளை உட்கொள்கின்றனர். கறிவேப்பிலை, புளி, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சாதிக்காய், தேங்காய் ஆகியவை தமிழர் சமயலில் அன்றாடம் இடம் பிடிப்பவை. மதிய உணவாக சோறுடன், குழம்பு மற்றும் கூட்டு வகையுடன் உண்கின்றனர். குழம்பாக சாம்பார், இரசம், மோர், வெறும் கறி(தேங்காய் குழம்பு) பயன்படுத்தப்படுகின்றன. கூட்டாக அவியல், பொரியல், அப்பளம், ஊறுகாய் போன்றவை உண்ணப்படுகின்றன. காலை உணவாக இட்லி, தோசை, ஆப்பம், புட்டு, ரவை, பொங்கல் ஆகியவை உண்ணப்படுகின்றது. தோசை  வித விதமா தோசை செய்து சாப்பிடுவது யாருக்கு தான் பிடிக்காது. தோசையில் இத்தனை வகை இருக்கிறதா என்று கூட நம்மால் ஆச்சிரியதுடன்

பிங்க் வாட்ஸஅப் பெயரில் புதிய வைரைஸ்! Pink Whatsapp a new virus!

பிங்க் வாட்ஸஅப்  பெயரில் புதிய வைரைஸ்  பிங்க் வாட்ஸஅப்  பெயரில் புதிய வைரைஸ் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

உலகில் இந்த 10 பல்கலைக்கழகங்கள்தான் பெரும்பாலான கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறது !

அமெரிக்காவில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் உலக அளவில் முன்னிலையில் இருக்கலாம் ஆனால் அதற்காக  ஃபோர்ப்ஸ் பட்டியலிட்ட 2021ன் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அனைவருமே அமெரிக்காவின் பல்கலைக்கழகத்தில் இருந்து தான் அவர்களுடைய பட்டத்தை பெற்று இருக்கிறார்கள் என்று  கருதிவிட முடியாது. அந்த பட்டியலில் மொத்தம் 2755 பேர் இருக்கிறார்கள் இவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கல்லூரிகளுக்கே சென்றதில்லை மேலும்  சிலர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டும் வெளியேறி இருக்கிறார்கள். ஆம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அதில் இருவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து பாதியில் வெளியேறி இன்று உலகத்தையே தங்களின் திறமைகளின் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள். ஒருவர் பில் கேட்ஸ் மற்றொருவர் மார்க் ஸுகெர்பெர்க்  ஆனாலும் கூட ஹார்வர்ட் பல்கலைக்கழகமே அதிக பெருங்கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறது.அந்த வகையில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்களில் மொத்தம் 29 முன்னாள் மாணவர்கள் இருக்கிறார்கள். அமேரிக்காவில் இல்லாத ஒரு பல்கலைக்கழகம் ஒன்று இருக்கிறது என்றால் அது இந்தியாவில் இருக்கும் மும்பை பல்கலைக்கழகம் மட்டும்  தான். இதன் சிற

சிறுமியின் அழகிய நடனம்! Beautiful Dance Performance

 சிறுமியின் அழகிய நடனம்!  (Beautiful Dance Performance)

சைனீஸ் ஃபிரைட் ரைஸ் (Chinese Fried Rice)

சைனீஸ் ஃபிரைட் ரைஸ் (Chinese Fried Rice) இன்றைய சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்க இருப்பது சைனீஸ்  ஃபிரைட் ரைஸ் எப்படி செய்வது அதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்ன அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்  எப்படி செய்ய போகிறோம் என்பது தான். வாருங்கள் நேரடியாக சமையல் களத்துக்கு செல்வோம். தேவையான பொருள்கள் பிரியாணி அரிசி - 1 கப்  உரித்த பச்சை பட்டாணி - அரை கப்  வெங்காய பச்சைத்தால் (Leeks ) - 1 நடுத்தர கேரட் - 1 குடமிளகாய்ப்பழம் - 2 பல்லாரி வெங்காயம் - 1 சில்லி சாஸ் - 1 மேஜை கரண்டி  நெய் அல்லது டாலடா - 1 கப்  சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி  தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி  உப்பு - தேவையானது  முளைவிட்ட பீன்ஸ்  - 1 மேஜைக்கரண்டி  செய்யும்முறை  வெங்காயத்தாள், கேரட், குடமிளகாய் இவை மூன்றையும் சுண்டுவிரலில் பாதி அளவு நீளமாய் வெட்டிக்கொள்ளவும். வெங்காயத்தையும் நீளமாகவும் சன்னமாகவும் வெட்டவும். சிறிது எண்ணெய்யை பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றி வெங்காயத்தை வதக்கவும். வெங்காயத்தாளையும் வதக்கவும். அதன் பின் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ் மூன்றையும் சேர்க்கவும். நன்றாக வதக்கி ஒர

நெய் சாதம் (GHEE RICE)

நெய் சாதம் (GHEE RICE) தேவையான பொருள்கள் : பிரியாணி அரிசி - 250 மில்லி லிட்டர்  நெய் - 60 மில்லி லிட்டர்  பல்லாரி வெங்காயம் - 3 முந்திரிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி  பட்டை - சிறிது  ஏலக்காய் - 4 கிராம்பு - 3 உப்பு தேவையான அளவு  செய்முறை  ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி பொடியாக வெட்டிய வெங்காயம் முந்திரிப்பருப்பு போட்டு பொன்னிறமாக வதக்கி பாதியை தனியாக எடுத்து வைத்துவிட்டு 600 மில்லி தண்ணீர் ஊற்றி வாசனை சாமான்களை போட்டு அரிசி, உப்பு போட்டு வேக வைக்கவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் எடுத்து வைத்திருக்கும் வெங்காயத்தை மேலே தூவி பின் பாத்திரத்தை சரியான மூடியால் இடைவெளி இல்லாமல் மூடி கங்கு மேலே அள்ளி வைத்து தம் போடவும். பாத்திரத்தில் அடியில் அதிக தீ வேண்டியதில்லை சுவையான மணமணமக்கும்  நெய் சாதம் (GHEE RICE) தயார்.  நீங்களும் செய்து பாருங்கள் உங்களுடைய கருத்துக்களை பகிரவும் நன்றி.  !

வெஜிடபிள் பிரியாணி (VEGITABLE BIRIYANI)

 வெஜிடபிள் பிரியாணி  தேவையான பொருள்கள்  பிரியாணி அரிசி - 400 மி.லி  நெய் - 100 மி.லி  பல்லாரி வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 5 பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி  பட்டை - 2 துண்டு  ஏலக்காய் - 4 கிராம்பு - 4 அன்னாசிப்பூ - 2  முந்திரிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி  தேங்காய் - 1 முடி காளிப்ளவர் - 100 கிராம்  காரட் - 200 கிராம்  பட்டானி - 200 கிராம்  உருளைக்கிழங்கு - 1  பீன்ஸ் காய் - 50 கிராம்  பாதிரொட்டி அல்லது ரஸ்க் 4 மல்லிசிச்செடி - கொஞ்சம்  புதினா - சிறிதளவு  உப்பு - தேவைக்கேற்ற அளவு  பூண்டு - 2 இஞ்சி - 25 கிராம் செய்முறை காய்கறிகள் அவரவர்கள் பிரியப்படி கூட்டியோ, குறைத்தோ போட்டு கொள்ளுங்கள். வாசனை சாமான்களை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும். மிளகாயையும் தனியாக பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும். உருளை கிழங்கை கொஞ்சம் பெரியதாகவும் மற்ற காய்கறிகளை ஒரே அளவாகவும் வெட்டி குக்கரில் குழயாமல் உப்பு சேர்த்து அவித்துக் கொள்ளவும். புதினா மல்லி இலைகளை இலை சிலையாக எடுத்து கழுவி வைக்கவும்.  பிரியாணி அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் வடிய வைக்கவும்.  வாய் அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊ

Relaxation Music

 Relaxation Music

போண்டா மோர்க் குழம்பு (BONDA MORE KUZHAMBU)

போண்டா மோர்க் குழம்பு (BONDA MORE KUZHAMBU) தேவை யான பொருள்கள்   : அதிகமாக புளிக்காத கட்டிமோர் - 1 கப் கடலைப்பருப்பு அல்லது துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி காயம் - ஒரு சிறு துண்டு மிளகாய்  - 2 தேங்காய்ச்சில் - 1 வெந்தயம்  - அரை தேக்கரண்டி புழுங்கல் அரிசி - 1 தேக்கரண்டி எண்ணெய்  - 1 தேக்கரண்டி உப்பு, மஞ்சள் - 1 தேக்கரண்டி செய்முறை :            துவரம் பருப்பு, அரிசி வெந்தயம் இவற்றை நனைய வைத்து (வருத்தும் அரைக்கலாம்). தேங்காய்ச்சில் , காயம், மிளகாய் சேர்த்து அரைத்து , மோரில் கலக்கி உப்பு, மஞ்சள் சேர்த்துக் கொள்ளவும், ஒரு தேக்கரண்டி எண்ணெய், சிறிது நெய் ஊற்றி கடுகு , உளுந்தம்பருப்பு வற்றல் 1 , கருவேப்பிலை போட்டு தாளித்து மோரை ஊற்றி நுரை கூடி வரும் போது இறக்கி மல்லித்தழை தூவி வைக்கவும் அல்லது  மோரை அடுப்பில் கொதிக்க வைக்கவேண்டிய அவசியமில்லை. எண்ணெய்யில் கடுகை தாளித்து கலந்து வைத்திருக்கும் மோரில் ஊற்றியும் உபயோகிக்கலாம் .  1. மோர் குழம்புடன் உப்பு சேர்த்து வேக வைத்த வெண்டைக்காய், கத்திரிக்காய், பூசணிக்காய் சேர்க்கலாம்.  2. நார் எடுத்து சுத்தம் செய்து பொடியாக வெட்டிய வாழைத்தண்டு, கீரைத்தண்டு இ

சாம்சங் புதிய ஸ்மார்ட் போன் எம்12 (Samsung M12)

சாம்சங் புதிய ஸ்மார்ட் போ ன்  எம்12  சாம்சங் எம் 12 ((Samsung M12)  பற்றிய   சிறப்பம்சங்களை பார்ப்போம். இந்த கைபேசியில் 48 மெகா பிக்சல் கொண்ட பின்புறம் குவாட் கேமராவை கொண்டு வடிவமைக்க பட்டு இருக்கிறது.  இரண்டு நானோ சிம் ஸ்லாட்டுகள் கொண்ட  ஆண்ட்ராய்டு ஒன் யுஐ  கோர் ஆப்பரேட்டிங் சிஸ்ட துடன் செயல்படுகிறது. இந்த மொபைல் ஒரு ஆக்டா கோர் SoC யால் இயக்கப்படுகிறது.  15W வேகத்துடனான சார்ஜ்ர் மூலம் பேட்டரி சார்ஜ் செய்யலாம்.  திரை வடிவமைப்பு 6.5 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே (720 x  1600 பிக்ஸல்ஸ்.  இத்துடன் எக்சினோஸ் 850 எஸ்.ஒ.சி அதிவேக திறன் கொண்ட செயலியுடன் 6 ஜிபி ரேம்.- ஐ கொண்டிருக்கிறது உள் சேமிப்பு 128 ஜிபி வரை மற்றும் டெடிகேட்டட் மைக்ரோ எஸ்.டி ஸ்லாட் மூலம் ஒரு டிபி வரை தகவல்களை சேமிக்க முடியும்.  முதன்மையாக செயல்படும்  கு வாட் கேமரா 48 எம்பி முதன்மை சென்சார் உடன் f /2.0 துவாரம் 123-டிகிரி பார்வை புலம் கொண்டது. 2 எம்பி மேக்ரோ சென்சார் உடன் 2 எம்பி  ஆழ  சென்சார் உடன் வடிவமைக்க பட்டு இருக்கிறது.  முன் பகுதியில் 8 எம்பி செல்பி கேமரா f /2.2 துவாரதுடன் தண்ணீர் துளி மாதிரியை போல வடிவமைக்க பட்டு இருக்கிறது

Covid-19 Awareness

 Covid-19 Awareness Click below 👇👇

உணவுப் பொருட்களின் பெயர் பட்டியல்!

உணவுப் பொருட்களின் பெயர் பட்டியல் நாம் அன்றாட பயன்படுத்தும் உணவு பொருள்கள் பார்த்து இருப்போம் சமயத்தில் வெளியில் போயி வாங்கும் போது அதன் பெயரை மறந்துவிடுவோம். அவ்வாறு மறக்க தேவை இல்லை இதோ இருக்கிறது ஆங்கிலத்திலும் தமிழிலும். இனி மறக்கவே மறக்காது.  English Tamil Aniseed சோம்பு  Asafoetida பெருங்காயம்  Bay leaf           பிரியாணி இலை  Cardamon ஏலக்காய்  Chilli மிளகாய் வற்றல் Cinnamon பட்டை  Cloves கிராம்பு  Coriander மல்லி  Cuminseeds சீரகம்  Fenu Greek வெந்தயம்  Garlic பூண்டு  Ginger இஞ்சி  Mint      புதினா  Mace ஜாதிபத்ரி  Mustard கடுகு Nutmeg ஜாதிக்காய் Pepper மிளகு  Poppyseed கசகசா Saffron குங்குமப்பூ  Sesame எள்  Tamarind           புளி  Turmeric           மஞ்சள்  Drymango காய்ந்த மாங்காய்  Tentils துவரம்பருப்பு  Black gram உளுந்தம் பருப்பு  Bengal gram கடலைப் பருப்பு  Green gram பாசிப்பருப்பு  Semolina           ரவை  Tentile flour கடலை மாவு  Vermicilli சேமியா    Yoghurt தயிர்  Jaggery கருப்பட்டி  Mo

அழகிய மரங்களின் அணிவகுப்பு !

 அழகிய மரங்களின் அணிவகுப்பு !