Skip to main content

Posts

ஜீன் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி | Jean Drez a Belgian-born Indian economist

ஜீன் ட்ரெஸ் பெல்ஜியத்தில் பிறந்தவர், இவரை ஏன் தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் நீயமித்துள்ளார்கள் என்று ஒருவர் என்னிடம் கேட்டார் கமலா ஹாரிஸ் ஏன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ளார், அவரை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் நான் இவரை ராஜினாமா செய்யச் செல்கிறேன் என்றேன்.  உடனடியாக என்னை முகநூலில் BLOCK செய்துவிட்டார், எனக்கு ஒரு கொசுவை அடித்த மகிழ்ச்சி. (அவர் சுதா ரகுநாதனுக்கு எதிராக போராடி, கமலா ஹாரிசுக்கு எதிராக கள்ள போஸ்டர் ஒட்டி அவரது வெற்றியை கொண்டாடிய வகையறா என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள்)  குறிப்பு:  ஜீன் ட்ரெஸ் பெல்ஜியத்தில் பிறந்தவர். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணராகவே உலகெங்கும் அறியப்படுகிறார். பிரபல பெல்ஜிய பொருளாதார நிபுணரின் மகனாகப் பிறந்த ஜீன் ட்ரெஸ், தனது பிஹெச்.டி ஆராய்ச்சிக்காக இந்தியா வந்தார். 1979 முதல் இந்தியாவில் வசிக்கிறார். 2002-ம் ஆண்டு இந்தியக் குடியுரிமை பெற்றார். தன்னை இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறார். இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மிக எளிமையான வாழ்க்கையே இவரின் அடையாளம். தன் மனைவியுடன் ஒற
Recent posts

தன்னை விமர்சித்தவரை அப்படியே திகைகச் செய்த கலைஞர் ! | Kalaingnar's stunning reply !

நகைச்சுவை பேச்சாளர்கள் பொதுவாக ஒவ்வொரு கட்சிகளிலும் இருப்பார்கள். அப்படி ஒருவராக இருந்தவர் தான் காங்கிரஸ் கட்சியின் சின்ன அண்ணாமலை. அந்த கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி திமுக தானே அப்படி இருக்கையில் அவர்கள் திமுகவை தான் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். திமுகவை விமர்சிப்பவர்கள் என்றால் அவர்களுக்கு அதிலும் ஒரு வாழ்க்கையை கொடுப்பவர் கலைஞரை தவிர வேறு யாராக இருப்பார்கள் ? ஆகவே அவர்களால் கலைஞரை விமர்சனம் செய்யாமல் அவர்களுக்கு தூக்கமும் வராது. எதிராளிகள் கலைஞரை கண்டபடி பேசியவர்களுக்கு தக்க சன்மானமும் பதவிகளையும் வழங்கி இருக்கிறார்கள். அவரை எதிர்த்தே கட்சியை தொடங்கிய வரலாறும் உண்டு. ஆக மொத்தத்தில் கலைஞர் தமிழ்நாடு என்னும் அரசியல் சக்கரத்தில் எப்போதுமே அச்சாணியாகவே இருப்பார். அவரை பிரித்துவிட்டு அரசியல் சக்கரங்கள் நகர வாய்ப்பும் இல்லை. அவர் 90 வயதில் அசராமல் அரசியலில் கொடிகட்டி பறந்தகாலத்திலும் கூட நேற்று பெய்த மழையில் காளான்களைப் போல முளைத்த புதிய புதிய "லெட்டர்பேட்" கட்சி தலைவர்களுக்கும் கூட சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். அரசியலில் அவரை ஆயிரமாயிரம் பேர் சீண்டி பார்த்து

அன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்று டாக்ஸி ஓட்டுநர்! | Cricket star to Taxi driver !

ஆம் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஷத் கான். இவர் பாகிஸ்தான் நாட்டுக்காக 9 டெஸ்ட் போட்டிகளும் , 58 ஒருநாள் போட்டிகளும் விளையாடி இருக்கிறார். 1997 முதல் 2006ஆம் ஆண்டு வரை விளையாடிய அர்ஷாத் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மொத்தம் 89 விக்கட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.  கிரிக்கெட் போட்டியில் இடம்பெறுவது சாதாரண காரியம் இல்லை. பல முயற்சிகள் அயராத உழைப்பு போன்றவற்றின் மூலமாக தான் அந்த நாட்டின் அணியில் இடம் பிடிக்க முடியும். ஒருமுறை தேர்வாகி உள்ளே வந்துவிட்டால் அதோடு நின்று விடாது. ஒவ்வொருவரும் தங்களது திறமையை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நுழைந்து நிற்க முடியும். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கோடிக்கணக்கில பணம் உலகளாவிய புகழ் எங்கு சென்றாலும் ஒரு செலிபிரிட்டி என்ற அந்தஸ்து இவற்றுடன் அவர்களுக்கு ஒரு நிரந்தர  சொகுசு வாழ்க்கைக்கு உத்ரவாதமாகவே அமையும் என்பதுதான்  பொதுவாக பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் நடந்தது.  ஒரு கட்டத்தில் தனது நாட்டுக்காக விளையாடிய அர்ஷத் இந்தியாவின் வீரேந்திர ஷேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை ஒரு போட்டியில் வீழ்த்திய தரு

நானும் ஒரு யாதவன் - கலைஞர் ! | Kalaignar Karunanidhi's timing wit !

தமிழில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிக்ஸர்களை அடிப்பது சகஜம் தான் என்றாலும் அந்த சிக்ஸர்களிலும் பல சிக்ஸர்கள் மைதானத்தை விட்டே பறந்தது என்பது தான் வரலாற்று பதிவு. கிரிக்கெட் விளையாட்டில் நொடிப்பொழுதில் பந்தை மின்னல் வேகத்தில் வீர்கள் சிக்ஸர்களை அடிப்பார்கள் அல்லவா அது போல தான் கலைஞரின் தமிழ் பேச்சு. ஆங்கிலத்தில் டைமிங் என்று சொல்லுவார்கள் அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் யாரும் எதிர்பாராத சமயத்தில் சிலர் சில காரியங்களை அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தும் அளவுக்கு செய்வார்கள். மதுரையில் இருக்கும் யாதவா கல்லூரியில் எப்படியாவது கலைஞரை ஒருமுறை அழைத்து பேச வைக்க வேண்டும் என்று அப்போதைய கல்லூரி முதல்வராக இருந்த தமிழ்குடிமகன் விரும்பினார். பலமுறை முயற்சித்த பின்னர் கலைஞர் அந்த கல்லூரிக்கு வரும் நாள் வந்தது . மேடையில் மாணவ மாணவிகளின் தமிழ் பேச்சி மற்றும் கவிதைகள் என மேடை களை கட்டியது. நிறைவு நிகழ்ச்சியாக கலைஞரின் உரை தொடங்கியது. கலைஞர் பேச போகிறார் என்றால் அந்த அரங்கம் எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரிய வேண்டும். எதிர்பார்த்தபடியே கலைஞர் யாதவா கல்லூரியின் மேடையில் பேச ஆரம்பித்தார். நானும் ஒரு யா

சென்னை நகரின் தோற்றமும் வளர்ச்சியும் | The growth of Chennai city

சென்னை நகரம் அதாவது மதராஸ் ஆங்கிலேயர்களால் அவர்களது வாணிப நோக்கங்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட துறைமுக பட்டணம். ஐரோப்பாவுடனும் கிழக்கிந்திய தீவுகளுடனும் (இந்தோனேசியா) வாணிபம் நடத்த ஏற்ற இடம் என பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்தவர் தேர்ந்தெடுத்த இடமே மெட்ராஸ். ஆண்டு 1639. இந்த ஊருக்கு அருகே நெசவுத்தொழில் நடந்து வந்தது. வாணிப கிடங்குகளுக்கு பாதுகாப்பாக கோட்டை கட்டப்பட்டது, அதுதான் இன்று நாம் சொல்கின்ற கோட்டை. கோட்டையை சுற்றிலும் உள்ள கிராமங்களும் நாளடைவில் வாங்கிபோடப்பட்டன. வெள்ளையர்கள் வாழ கோட்டைக்கு வடக்கே வெள்ளையர் நகரம், அவர்களுடன் வணிகம் நடத்தும் உள்ளூர் வணிகரும் இரு மொழிகள் அறிந்த உதவியாளர்கள் ஆன துபாஷிகளும் வாழ வெளியே மேற்கே கறுப்பர் நகரம். வெளியிடங்களில் இருந்து குடியேற்றப்பட்ட நெசவாளர்கள் வாழ்ந்த சின்னதறிப்பேட்டை, அதாவது சிந்தாதிரிப்பேட்டை. ஆங்கிலேயர்கள் கையில் அதிகாரம் வந்த பின் தங்களுக்கான பங்களாக்கள் கட்டி வாழ்ந்த எழும்பூர். ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருடன் நடத்திய மைசூர் போர்களில் ஆங்கிலேயர் வென்ற பிறகு, மாகாணத்தின் தலைநகர் ஆனது சென்னை. ஆனால் போர்களால் ஆன எ

சட்டப்பேரவையில் நடந்த சுவாரசியம் ! | Kalaignar and MGR inside Assembly !

  கலைஞர் பேசுகிறார் என்றால் அது ஏதோ சாதாரண பேச்சாக ஒருபோதும் இருந்தது கிடையாது. அவர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தனிச்சிறப்பு உண்டு. உதாரணமா என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்று ஒரு வார்த்தை கலைஞர் எங்கு சொன்னாலும் எப்போது சொன்னாலும் அந்த அரங்கமே அதிர்ந்து விடும். கலைஞர் எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக எம்ஜியார் இருந்த சமயம் அது. அரசியலில் எம்ஜியாரும் கலைஞரும் எதிர் எதிராக இருந்தாலும் கூட நட்பின் அடிப்படையில் நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள். ஒருமுறை சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆர் பேசுகையில் "எதிர்க்கட்சித் தலைவரும் நானும் கடுமையாக சண்டை போடுவோம். அதில் குடுமிப்பிடி சண்டை வராதா என்றெல்லாம் எதிர்பார்த்து இருந்தவர்கள் ஏமாந்து போனார்கள்" என்றார். கலைஞர் உடனே எழுந்து "இருவருக்குமே குடுமி இல்லை" என்று நொடிப்பொழுதில் சொல்ல சட்டப்பேரவை சிரிப்பொலியில் அதிருக்கிறது !

GST யின் தவறான கொள்கைகள் ஏன் சரி செய்யப்படவில்லை?

  ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்தின் விகிதம் அல்லது ஜிஎஸ்டி வருவாய் தொகுப்பிற்கு மாநிலங்களின் பங்களிப்பை முன்வைத்து வாக்களிப்பதற்கான விகிதாச்சார பிரதிநிதித்துவம் இருந்திருந்தால், கோவிட் பெருந்தொற்றுக் கால மருத்துவப் பொருட்கள் இப்போது வரி இல்லாமல் இருந்திருக்கும். பெருந்தொற்று காலப் பணிகளை விரைவுபடுத்த பெரும்பாலான நாடுகள் வழக்கமான செயல்பாடுகளை நிறுத்தி வைத்த நேரத்தில், இந்தியாவில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் இன்னும் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மிக முக்கியமான மருத்துவக் கருவிகளுக்கு வரி விதிக்கவேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து "விவாதத்தில்" ஈடுபட்டுள்ளது. பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான உயிர் காக்கும் பொருட்கள் மீதான வரிவிலக்கு குறித்த ஒருமித்த கருத்து, மே 28 அன்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் வலுவற்று இருந்தது. சில மாநிலங்களின் கவுன்சில் உறுப்பினர்கள் (அமைச்சர்கள்) இந்த தயாரிப்புகள் மீது தொடர்ந்து வரி விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர், சில நேரங்களில் வலுவாகவும், மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இந்த இரக்கமற்ற குரல் GST வரிவிதிப்பின் செயல்ம